

டாக்கா,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையே நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் சிட்டகாங்கில் இன்று நடைபெறவிருந்தது. ஆனால், ஆட்டம் சிட்டகாங்கில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று நடைபெறவிருந்த 2வது டி20 ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 ஆட்டம் வரும் 2ம் தேதி டாக்காவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.