ஐபிஎல் : சிவம் துபேவின் சாதனையை தகர்த்த ரஜத் படிதார்

ரஜத் படிதார் ஆர்சிபி அணிக்காக 55 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் : சிவம் துபேவின் சாதனையை தகர்த்த ரஜத் படிதார்
Published on

ஐதராபாத்:

ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தியது. தோல்வியைச் சந்தித்த போதிலும், ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் தனது பேட்டிங்கின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் 39 பந்துகளை சந்தித்த ரஜத் படிதார், 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 56 ரன்கள் குவித்தார். அவரது இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அந்த ஒரே சிக்ஸர், ஐபிஎல் தொடரில் அவரது மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தியது.

Also Read
ஐதராபாத்துடன் தோல்வி... டிராவிஸ் ஹெட்டுடன் கைகுலுக்காமல் சென்ற விராட் கோலி - வீடியோ வைரல்
ஐபிஎல் : சிவம் துபேவின் சாதனையை தகர்த்த ரஜத் படிதார்

இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரஜத் படிதார் பெற்றுள்ளார். இந்த சாதனையை எட்ட அவர் வெறும் 933 பந்துகள் மட்டுமே எடுத்துக் கொண்டார். இதற்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் சிவம் துபே 992 பந்துகளில் 100 சிக்ஸர்கள் அடித்ததே இந்திய வீரரின் அதிவேக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை படிதார் முறியடித்துள்ளார்.

2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ரஜத் படிதார், இதுவரை ஆர்சிபி அணிக்காக 55 போட்டிகளில் விளையாடி 100 சிக்ஸர்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com