ரஜத் படிதார் விலகல்... இந்தியா ஏ அணியின் புதிய துணைக் கேப்டனாக ரிங்கு சிங்

இந்தியா ஏ அணி நவம்பர் 22-ஆம் தேதி பாகிஸ்தானையு எதிர்கொள்கிறது.
ரஜத் படிதார்
Published on: 

புதுடெல்லி,

ஏசிசி ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்தியா ஏ அணியில் இருந்து ரஜத் படிதார் விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் புதிய துணைக் கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

போட்டி அட்டவணை

கத்தாரின் தோஹாவில் நவம்பர் 19 முதல் 29-ஆம் தேதி வரை ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ பிரிவில் வங்காளதேசம் ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் ஆகிய அணிகள் உள்ளன.

இந்தியா ஏ அணி நவம்பர் 20-ஆம் தேதி நேபாளத்தையும், நவம்பர் 22-ஆம் தேதி பாகிஸ்தானையும், நவம்பர் 24-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும் எதிர்கொள்கிறது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளிலும், இறுதிப்போட்டி நவம்பர் 29-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

ரஜத் படிதார்

இந்நிலையில், இத்தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக இடம்பெற்றிருந்த ரஜத் படிதார் விலகியுள்ளார். அவர், 50 ஓவர் போட்டிகளுக்கான தேர்வில் தன்னைப் பரிசீலிக்க வேண்டாம் என்று பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டநிலையில், இந்த மாற்றம் நிகழந்துள்ளது.

திலக் வர்மா

இந்தியா ஏ அணிக்கு திலக் வர்மா கேப்டனாக தொடர்கிறார். புதிய துணைக் கேப்டனாக ரிங்கு சிங் பொறுப்பேற்றுள்ளார். அபிஷேக் சர்மா, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பிரப்சிம்ரன் சிங், குமார் குஷாக்ரா உள்ளிட்ட வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா ஏ அணி

அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, பிரப்சிம்ரன் சிங், திலக் வர்மா (கேப்டன்), ரிங்கு சிங் (துணைக் கேப்டன்), குமார் குஷாக்ரா, சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷாபாஸ் அகமது, விப்ராஜ் நிகாம், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியான், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், அர்ஷத் கான், ஆயுஷ் பதோனி.

X