

நாக்பூர்,
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் விதர்பா-மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நாக்பூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த விதர்பா அணி தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் குவித்துள்ளது. தனது 56-வது முதல்தர போட்டி சதத்தை பூர்த்தி செய்த வாசிம் ஜாபர் 178 ரன்கள் விளாசினார்.
கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கிய பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) முதலில் பேட் செய்த டெல்லி அணி தனது முதல் இன்னிங்சில் 240 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.