

2026 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டத்தில், டெல்லி அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி மற்றும் பரோடா அணியின் பிரியன்ஷு மொலியா ஆகியோர் அபாரமாக விளையாடி சாதனை படைத்தனர்.
ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் ஆயுஷ் பதோனி ஆட்டமிழக்காமல் 228 பந்துகளில் 210 ரன்கள் குவித்தார். இதில் 19 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். அவருக்கு சிறப்பாக ஒத்துழைத்த சுமித் மாதுர் ஆட்டமிழக்காமல் 150 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 334 ரன்கள் சேர்த்ததால், டெல்லி அணி 515 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
குஜராத் அணிக்கு எதிராக 217 ரன்கள் எடுத்திருந்த பதோனி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார்.
இதேபோல், ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் பரோடா அணி ஆரம்பத்தில் 169 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது சிறப்பாக விளையாடிய 21 வயதான பிரியன்ஷு மொலியா, ஆட்டமிழக்காமல் 492 பந்துகளில் 321 ரன்கள் குவித்தார். இதில் 36 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். அவருடன் இணைந்து விளையாடிய மகேஷ் பித்தியா 102 ரன்கள் எடுத்தார். இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு 266 ரன்கள் சேர்த்து அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பரோடா அணி முதல் இன்னிங்ஸில் 616 ரன்கள் எடுத்தது.