தமிழ்நாடு-ரெயில்வே ஆட்டத்தில் ஒரேநாளில் 16 விக்கெட்டுகள் சரிவு

) முன்னாள் சாம்பியனான தமிழ்நாடு-ரெயில்வே அணிகள் மோதுகின்றன.
தமிழ்நாடு-ரெயில்வே ஆட்டத்தில் ஒரேநாளில் 16 விக்கெட்டுகள் சரிவு
Published on: 

92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 'எலைட்' குரூப்பில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரி வாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

சென்னை சேப்பாக்கத்தில்

இதன் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் (டி பிரிவு) முன்னாள் சாம்பியனான தமிழ்நாடு-ரெயில்வே அணிகள் மோதுகின்றன.

இதில் ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 184 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகம் முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.

தமிழக அணி

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக அணி 63.1 ஓவர்களில் 165 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 59 ரன்கள் எடுத்தார். ரெயில்வே தரப்பில் ராஜ் சவுத்ரி 5 விக்கெட்டும். டோபிக் உதின் மொன்டல் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

19 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ரெயில்வே அணி. சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டுகளை பறிகொடுத் தது. ஆட்ட நேரம் முடிவில் ரெயில்வே அணி 9 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நேற்று ஒரேநாளில் 16 விக்கெட்டுகள் சரிந்தன. தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், ஹேம்சுதேஷன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com