ரஞ்சி கிரிக்கெட்: சண்டிகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் வெற்றி

தமிழ்நாடு அணி, இன்னிங்ஸ் மற்றும் 259 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரஞ்சி கிரிக்கெட்: சண்டிகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் வெற்றி
Published on: 

சண்டிகர்,

477 ரன்கள் பின் தங்கியதால் சண்டிகர் அணி பாலோ ஆன் ஆனது.

தமிழ்நாடு - சண்டிகர் மோதல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, சண்டிகருடன் மோதியது. கடந்த 2-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், பிரதோஷ் ரஞ்சன் பால் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார்.

571 ரன்களுக்கு டிக்ளேர்

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்திருந்தது. 2ம் நாள் ஆட்டத்தின்போது அதிரடியாக விளையாடிய பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்புக்கு 571 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

சண்டிகர் திணறல்

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சண்டிகர் அணி, தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் அந்த அணி 37.3 ஓவர்களில் 94 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 477 ரன்கள் பின் தங்கியதால் சண்டிகர் அணி பாலோ ஆன் ஆனது. சோனு யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி

இதனை தொடர்ந்து சண்டிகர் அணி தனது 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்ஸ்மேனான அர்ஜுன் ஆசாத் 60 ரன்களும், மனன் வோரா 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் சண்டிகர் அணி 64.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இதன் மூலம் தமிழ்நாடு அணி, இன்னிங்ஸ் மற்றும் 259 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஜித் ராம் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு டிரா என புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

X