ரஞ்சி கோப்பை: ஒற்றை ஆளாக...400 ரன்களை குவித்த சின்மய் சுதர்

400 ரன்கள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ரஞ்சி கோப்பை: ஒற்றை ஆளாக...400 ரன்களை குவித்த சின்மய் சுதர்
Published on: 

மும்பை,

92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பிளாஸ்பூரில் (டி பிரிவு) நடக்கும் இமாசலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 528 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 154 ரன்னும், ஆகாஷ் ஆனந்த் 117 ரன்னும் (நாட்-அவுட்) எடுத்தனர். 388 ரன்கள் பின்தங்கிய இமாசலபிரதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) 7 ரன் பின்தங்கிய கர்நாடக அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் டுக்கு 99 ரன்கள் எடுத்திருக்கிறது. மத்தியபிரதேசத்துக்கு எதிராக (ஏ பிரிவு) 168 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய புதுச்சேரி அணி ஒரு விக்கெட்டுக்கு 98 ரன் எடுத்துள்ளது.

'பிளேட்' பிரிவில் சோவிமாவில் நடைபெறும் நாகலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய மிசோரம் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 581 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 3-வது வரிசையில் இறங்கிய சின்மய் சுதர் 400 ரன்கள் (517 பந்து, 46 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com