

ஹூப்ளி,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகா- ஜம்மு காஷ்மீர் அணிகள் இடை யிலான இறுதி ஆட்டம் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் பேட் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி தொடக்க நாளில் 2 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் பேட்டிங்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஜம்மு-காஷ்மீர் அணி வலுவான நிலையை எட்டியி ருக்கிறது. சுபம் பண்டிர் 121 ரன்னிலும் (247 பந்து, 12 பவுண்டரி, 2 சிக் சர்), அப்துல் சமத் 61 ரன்னிலும், கன்ஹையா வாதவன் 70 ரன்னிலும், பராஸ் டோக்ரா 70 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நேற்றைய முடிவில் ஜம்மு-காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 527 ரன்கள் குவித்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து விளையாடிய ஜம்மு காஷ்மீர் 584 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழ்ந்தது. கர்நாடகா அணியில் சிறப்பாக பந்துவீசி பிரசித் கிரிஷ்னா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.