ரஞ்சி டிராபி; சவுராஷ்டிராவை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தமிழகம்

தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 100 ரன்னும், சாய் சுதர்சன் 82 ரன்னும் எடுத்தனர்.
image courtesy; @TNCACricket
image courtesy; @TNCACricket
Published on

கோவை,

நடப்பு சீசனுக்கான (2024-25) ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் டி பிரிவில் கோவையில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தமிழகம் - சவுராஷ்டிரா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா தனது முதல் இன்னிங்சில் 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. சவுராஷ்டிரா தரப்பில் வாசவதா 62 ரன்கள் எடுத்தார். தமிழகம் தரப்பில் சோனு யாதவ், முகமது, சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழகம் 367 ரன்கள் குவித்தது. தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 100 ரன்னும், சாய் சுதர்சன் 82 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 164 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணியினர், தமிழக வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் சவுராஷ்டிரா அணி தனது 2வது இன்னிங்சில் 94 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழகம் தரப்பில் குர்ஜப்நீத் சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com