டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்... ரஷித் கான் உலக சாதனை

தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் ரஷித் கான் இந்த சாதனையை படைத்துள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க உள்ளூர் தொடரான எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று (குவாலிபயர் 1) ஆட்டத்தில் எம்.ஜ. கேப்டவுன் அணி பார்ல் ராயல்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இதில் கேப்டவுன் அணியின் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் சேர்த்து ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் (சர்வதேச, லீக், உள்ளூர் போட்டி உள்பட) அவரது விக்கெட் எண்ணிக்கை 633-ஆக உயர்ந்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வெய்ன் பிராவோ 631 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முந்தி ரஷித் கான் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com