இந்திய வீரருக்கு ரவி சாஸ்திரி பாராட்டு

வளர்ந்து வரும் நம்பிக்கையை முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
இந்திய வீரருக்கு ரவி சாஸ்திரி பாராட்டு
Published on: 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிலையில், அவரது வளர்ந்து வரும் நம்பிக்கையை முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

குர்னூர் பிரார்

நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் குர்னூர் பிரார் 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் இரண்டு மெய்டன் ஓவர்களும் அடங்கும். அவரது சிறப்பான பந்துவீச்சால் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

குர்னூர் பிராரின் பந்துவீச்சு மட்டுமின்றி, போட்டிக்குப் பிறகு அவர் பேசிய விதமும் ரவி சாஸ்திரியை கவர்ந்துள்ளது. தனது வேகத்தை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதில் குர்னூர் தெளிவாக இருப்பதாக சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, "குர்னூர் தனது பலம் என்ன என்பதை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார். தான் வேகமாகப் பந்து வீசக்கூடியவர் என்பதை அறிந்திருந்தாலும், அதில் மட்டும் கவனம் செலுத்தாமல் சரியான லென்த் பகுதியில் பந்துவீச வேண்டும் என்று நினைக்கிறார். இது ஒரு இளம் பந்துவீச்சாளரிடம் இருக்க வேண்டிய நல்ல பண்பாகும். ஈடன் பார்க் மைதானத்திலும் அவரைப் பார்த்தோம். இப்போது வெலிங்டனிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவரது நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது" என்று பாராட்டியுள்ளார்.

X