ஆல் டைம் சிறந்த டி20, ஒருநாள் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த ராயுடு.. யாரெல்லாம் தெரியுமா..?

imahe courtesy:PTI
ராயுடு தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களில் இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய தலா 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டது.
அதில் அவர் தேர்வு செய்த 6 வீரர்களில் (இரண்டையும் சேர்த்து) 5 பேர் இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி அம்பத்தி ராயுடு ஆல் டைம் சிறந்த 3 டி20 பேட்ஸ்மேன்களாக ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார்.
மறுபுறம் ராயுடு தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களில் இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி, இந்தியாவின் விராட் கோலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரை ஆல் டைம் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்துள்ளார்.
Related Tags :
Next Story






