ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி
Published on

பெங்களூரு,

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் இடம்பெற்றிருந்தார்.

இதனிடையே, யாஷ் தயாள் மீது 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதில் ஒருவர் 18 வயதிற்கு உள்பட்ட சிறுமி ஆவார். இது தொடர்பாக யாஷ் தயாள் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து யாஷ் தயாள் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக யாஷ் தயாள் விலகியுள்ளதாக ஆர்சிபிஐ அணியின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். பெங்களூரு அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் விலகியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com