

பெங்களூரு,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. பெரும்பாலான அணிகள் தலா 7 ஆட்டங்களை ஆடிவிட்டன.
இதனிடையே, பெங்களூருவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 44 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 81 ரன்கள் அடித்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதன்படி, 7 ஆட்டங்களில் ஆடியுள்ள விராட் கோலி 328 ரன்கள் குவித்து பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். அவர் அதிக ரன்கள் அடித்தால் வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை பெற்றுள்ளார். கோலிக்கு அடுத்தபடியாக 323 ரன்களுடன் ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.