இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி - இங்கிலாந்து கேப்டன் ஓபன் டாக்

இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி - இங்கிலாந்து கேப்டன் ஓபன் டாக்
Published on

மும்பை,

2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மோதும் அதே வேளையில், இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.

முதல் அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்னில் நடக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி இரவு 7 மணிக்கும் தொடங்குகிறது.

Also Read
2028 டி20 உலக கோப்பையிலும் விளையாடுவேன்: கிளென் மேக்ஸ்வெல் நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி - இங்கிலாந்து கேப்டன் ஓபன் டாக்

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் மனம் திறந்துள்ளார். அவர் பேசுகையில்,

“எங்கள் அணியில் சில வீரர்கள் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள விரும்புவதாக கூறி இருந்தனர். இந்தியா ஒரு தரமான அணி என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் வான்கடே போன்ற பெரிய இடத்தில் அவர்களை வீழ்த்துவது ஸ்பெஷலாக இருக்கும். இரு தரப்பினருக்கும் மிகுந்த அழுத்தம் நிறைந்த போட்டியாக இது அமையும். இந்த சவாலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com