கோலி-ரோகித் இடையே மோதலா? தேர்வு குழு தலைவர் பதில்

கோலி- ரோகித் இடையே விரிசல் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய அணியின் கேப்டன்கள் விராட் கோலி (டெஸ்ட்), ரோகித் சர்மா (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) இடையே விரிசல் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில்,

சில சமயம் கோலி- ரோகித் இடையே மோதல் போக்கு இருப்பதாக வெளியாகும் செய்திகளை படிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வரும். எதிர்காலம் குறித்து இருவரிடையே சிறப்பான திட்டமிடல் உள்ளன என்பதை உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன். எனது இடத்தில் நீங்கள் இருந்தால், கோலியும், ரோகித்தும் ஒரு அணியாக, ஒரு குடும்பமாக எந்த அளவுக்கு ஒருங்கிணைந்து உழைக்கிறார்கள் என்பதை நீங்கள் உற்சாகமாக பார்த்து ரசிக்கலாம் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com