இலங்கை டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ரிஷப் பண்ட்
Published on

ராஞ்சி,

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 15 முதல் தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–27 தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தத் தொடரில் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு, இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.

ரிஷப் பண்ட் , தற்போது ராஞ்சியில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இலங்கை சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக நடைபெறும் இந்த பயிற்சியில், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன்களை மேலும் மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com