லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பண்ட் விலகல்

லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பண்ட் விலகல்
Published on

லக்னோ,

2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.இதனால் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் மீது கடும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார் என லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் கேட்டுக் கொண்டதால் நாங்கள் அதற்கு ஒப்புதல் அளித்தோம் எனவும் தெரிவித்துள்ளது.

கேப்டனாக, அவர் மொத்தம் 2 ஐபிஎல் தொடர்களில் 28 ஐபிஎல் போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். இதில் அவரால் வெறும் 10 வெற்றிகளை மட்டுமே அணிக்கு பெற்றுத்தர முடிந்தது. இது அவரது கேப்டன்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. நடப்பு சீசனில் 13 இன்னிங்சில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 312 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முந்தைய சீசனில் 269 ரன்கள் அடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com