

சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், லக்னோ அணியில் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இணைந்துள்ளார். அவர் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
லக்னோ அணி தனது முதல் போட்டியில் 1ம் தேதி டெல்லி அணியை எதிர்கொள்கிறது.