ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ரிஷப் பண்ட் தேர்வு

ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ரிஷப் பண்ட் தேர்வாகி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

துபாய்,

ஐசிசி மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்க முடிவு செய்திருந்தநிலையில், ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு இந்தியாவின் ரிஷப் பண்ட், இங்கிலாந்தின் ஜோ ரூட், அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் பெயரை ஐசிசி பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் ஐசிசி அறிமுகம் செய்துள்ள மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ரிஷப் பண்ட் முதல் வீரராக வென்றுள்ளார். மேலும் சிறந்த வீராங்கனை விருதுக்கு தென் ஆப்பிரிக்காவின் ஷப்னீம் இஸ்மாயில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி முதல் விருதை ரிஷப் பண்ட், ஷப்னீம் இஸ்மாயில் ஆகியோர் தட்டிச்சென்றனர்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை ருசித்தது. இதனால் ரிஷப் பண்ட் பெயரை ஐசிசி பரிந்துரை செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com