அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ராபின் உத்தப்பா ஓய்வு

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த உத்தப்பா ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
Image Courtesy: PTI/ Twitter @robbieuthappa
Image Courtesy: PTI/ Twitter @robbieuthappa
Published on

சென்னை,

அனைத்து வகையான சர்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா அறிவித்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கேரளா மற்றும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர் இன்று ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராபின் உத்தப்பா ரசிகர்களுக்கு உருக்கமான கடிதத்தை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி 20 வருடங்கள் ஆகிறது. எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம்.

இருப்பினும், அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மேலும் நன்றியுள்ள இதயத்துடன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என் வாழ்க்கையில் ஒரு பயணத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவு மற்றும் ஊக்கம் அளித்த பிசிசிஐயின் தலைவர், செயலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான நினைவுகளை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு ராபின் நன்றி. அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com