ரோகித் சர்மாவிடம் கற்றுக்கொண்டதை களத்தில் பயன்படுத்துகிறேன் – திலக் வர்மா

அதன் பலனாக நல்ல முடிவுகளும் கிடைத்து வருகின்றன.

ரோகித் சர்மாவிடம் கற்றுக்கொண்டதை களத்தில் பயன்படுத்துகிறேன் – திலக் வர்மா
Published on: 

புதுடெல்லி,

இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா, முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பல விஷயங்களை தற்போது தனது ஆட்டத்தில் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஒரு போட்டிக்கு முன்பு என்ன நடக்கலாம் என்பதை முழுமையாக யோசித்து தயாராகிவிடுவேன். அதன் பிறகு களத்திற்குச் செல்லும்போது, திடீரென எந்த ஒரு பந்துவீச்சாளர் வந்தாலும் நான் ஆச்சரியப்படுவதில்லை. ‘இந்த பந்துவீச்சாளர் வந்துவிட்டாரே, இப்போது பந்து இப்படி செயல்படுகிறதே, அவருடைய சிறந்த பந்து இதுதானே’ என்று யோசிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்படாது.

நான் எப்போதும் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்பார்த்து அதற்கேற்ப தயாராகுவேன். இந்த அணுகுமுறை எனக்கு உண்மையிலேயே மிகவும் உதவியாக இருக்கிறது. அதன் பலனாக நல்ல முடிவுகளும் கிடைத்து வருகின்றன.

கேப்டன்ஷிப்பில் ரோகித் சர்மா எந்த பந்துவீச்சாளரை எப்போது கொண்டு வருகிறார், அவர்களை எப்படி பயன்படுத்துகிறார் என்பதை நான் கவனிப்பேன். அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அவரிடம் இருந்து கவனித்துக் கற்றுக்கொண்டேன். தற்போது அந்த அனுபவங்களை நான் களத்தில் இருக்கும்போது எனது அணுகுமுறையிலும் பயன்படுத்தி வருகிறேன். என்று திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com