ஜோஸ் பட்லருக்கு ஜெர்சி பரிசளித்த ரோகித் சர்மா

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்கு ரோகித் சர்மா ஜெர்சி பரிசளித்துள்ளார்.
ஜோஸ் பட்லருக்கு ஜெர்சி பரிசளித்த ரோகித் சர்மா
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. இருப்பினும் இந்திய அணியில் ரோகித் சர்மா 3-வது போட்டியில் சதமடித்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்கு ரோகித் சர்மா ஜெர்சி பரிசளித்துள்ளார். அந்த ஜெர்சியில்,

உங்களுக்கு எதிராக விளையாடியதை மிகவும் ரசித்தேன் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜோஸ் பட்லர் கூறியதாவது,

எதிரணி வீரர்களில் நான் எப்போதும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெர்சி இதுதான். எனது எல்லாக் காலங்களிலும் மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவரான ரோகித் ஷர்மாவின் ஜெர்சியை பெற்றது மகிழ்ச்சி. இதை வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக பாதுகாப்பேன். நன்றி என தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com