வெஸ்ட் இண்டீஸ் உடனான 4 வது ஒருநாள் போட்டி 21-வது சதம் கடந்த ரோஹித் சர்மா

வெஸ்ட் இண்டீஸ் உடனான 4 வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தனது 21-வது சதத்தை அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் உடனான 4 வது ஒருநாள் போட்டி 21-வது சதம் கடந்த ரோஹித் சர்மா
Published on

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன நான்காவது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது.

முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என ஒருநாள் தொடரில் சமநிலையில் இருக்கின்றன. முதல் போட்டியை இந்தியா வென்றது. இரண்டாம் போட்டி டிரா ஆனது. மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்று இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் 4 வது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற இக்கட்டான சூழலில் இந்தியா இருக்கிறது.

4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ரோஹித், தவான் துவக்கம் அளித்தனர். அதிரடியாக 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்த தவான் 40 பந்துகளில் 38 ரன்கள் அடித்து கீமோ பால் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த கோலி 16 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். ஏற்கனவே மூன்று போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்து இருந்த கோலி, இன்று தொடர்ந்து நான்காவது சதத்தை அடித்து இருந்தால், புதிய சாதனை படைத்திருப்பார். அந்த வாய்ப்பை நழுவ விட்டார் அவர்.

அடுத்து ராயுடு, ரோஹித்துக்கு ஒத்துழைப்பு அளிக்க, ரோஹித் சதம் அடித்தார். இவர்கள் கூட்டணியும் 100 ரன்களை கடந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு உள்ளது. இந்தியா 43.2 ஓவர்கள் முடிவில் 304 ரன்கள் எடுத்து. 2 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது. ரோஹித் 162 , ராயுடு 85 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். இந்திய அணியின் தற்போதைய ரன் ரேட் 7.18 ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com