

இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் நேற்று நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் (118 ரன்) சதம் அடித்தார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு எதிராக ஒரே ஆண்டில் 3 வடிவிலான (டெஸ்ட், ஒருநாள். 20 ஓவர்) போட்டியிலும் செஞ்சுரி அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஏற்கனவே கிளென் பிலிப்ஸ் இந்தியாவுக்கு எதிராக ஜனவரி மாதம் இந்தூரில் நடந்த ஒருநாள் போட்டி யில் 106 ரன்னும், கடந்த மாதம் ஆக்லாந்தில் நடந்த 20 ஓவர் போட்டியில் 107 ரன்னும் எடுத்திருந்தார்.
பிலிப்ஸ், ஒரு அணிக்கு எதிராக ஒரே ஆண்டில் 3 வடிவிலான போட்டியிலும் சதமடித்த இந்திய வீரரான ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். ரோகித் சர்மா 2017-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி களில் சதம் அடித்து இருந்தார்.
நேற்றைய ஆட்டத்துக்கு பிறகு கிளென் பிலிப்ஸ் கூறுகையில், 'இந்த டெஸ்டில் இரு அணிகளும் சமமான நிலையில் தான் உள் ளது. இந்தியா புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்தியது. இருப்பினும் நாங்கள் 368 ரன்கள் எடுத்துள்ளோம். இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆடுகளத்தின் தன்மை மெதுவானதாக மாறி வருகிறது. ஆட்டம் போகப்போக நான், ரச்சின் ரவீந்திரா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்போம். பேசின் ரிசர்வ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற பெயரை பெற்றுள்ளது. ஆனால் நான் இந்த மைதானத்தில் நடந்த பிளங்கெட் ஷீல்டு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறேன். பந்தில் சுழற்சியை ஏற்படுத்தினால், பவுன்ஸ் கிடைப்பதை பார்த்து இருக்கிறோம். அதுபோல் நடக்கும் என்று நம்பலாம்" என்றார்.