

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, வர்த்தகப் பரிமாற்றம் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியநிலையில், மும்பை அணியின் கேப்டன் பதவி காலியானது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மா பொறுப்பேற்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.