கடினமான நேரத்தில் உங்களுடைய ஆதரவு தேவை: ரோகித் சர்மா வேண்டுகோள்

ரசிகர்களுக்கு ரோகித் சர்மா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடினமான நேரத்தில் உங்களுடைய ஆதரவு தேவை: ரோகித் சர்மா வேண்டுகோள்
Published on: 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2027-ம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் சர்மா மீண்டும் அணியின் தலைமைப் பொறுப்புக்கு திரும்பியுள்ளார்

ரோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களுக்கு ரோகித் சர்மா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ரோகித் சர்மா பேசுகையில்,

எங்களுக்கு ஆதரவளியுங்கள். இப்போதுதான் உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. எதுவுமே எங்களுக்குச் சாதகமாக நடைபெறாத இந்தக் கடினமான நேரத்தில்தான் உங்களுடைய ஆதரவு அதிகம் தேவைப்படுகிறது.

நீங்கள் எங்களுக்கு ஆதரவளித்தால் இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று நான் இங்கு வாக்குறுதி அளிக்க விரும்பவில்லை. எங்களுக்குத் தேவைப்படுவது உங்கள் ஆதரவு மட்டுமே. இதை நான் மனதின் ஆழத்திலிருந்து கூறுகிறேன்.

ஏனென்றால், இத்தனை ஆண்டுகளாக எங்களுக்குக் கிடைத்த வெற்றிகளில் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. எங்களுடைய வெற்றிப் பயணத்தில் நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதேபோன்று மீண்டும் ஒருமுறை எங்களுக்காகத் துணை நிற்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

மைதானத்தில் விளையாடும் 11 வீரர்களுக்கு அடுத்தபடியாக, 12-வது வீரராக அல்ல; எங்களுடைய 13-வது வீரராக இருந்து உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குங்கள்.என தெரிவித்தார்.

X