உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா விளையாட வேண்டும் - ரஹானே

உலகக் கோப்பை போட்டியில் அவரை போன்ற ஒரு வீரரின் அனுபவம் தேவையானதாகும்.
உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா விளையாட வேண்டும் - ரஹானே
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜிங்யா ரஹானே அளித்த ஒரு பேட்டியில் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா விளையாடப்போகிறார் என்பதை அவரிடம் உறுதிப்படுத்துவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். கடந்த பல வருடங்களாக அணியில் அவரது பங்களிப்பு மிகச்சிறப்பாக உள்ளது. அழுத்தம் நிறைந்த உலகக் கோப்பை போட்டியில் அவரை போன்ற ஒரு வீரரின் அனுபவம் தேவையானதாகும்.

ரோகித் சர்மா ஆடுவது குறித்து விவாதமே எழக்கூடாது. மிகப்பெரிய வீரரான அவரது ஆட் டத்தை ஒவ்வொரு தொடரின் அடிப்படையில் கேள்விக்குள் ளாக்குவது. மதிப்பிடுவது என்பது சரியானது கிடையாது. அவ ரது தற்போதைய பார்மை மட்டும் பார்க்காமல் அவரது அனுப வத்தையும், வெற்றிக்கு அளித்த பங்களிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com