

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா, முன்னாள் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் இருந்து தலைமைப் பண்பு மற்றும் வீரர்களை அணுகும் விதம் குறித்து நிறைய கற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய திலக் வர்மா,
ரோகித் சர்மாவிடம் இருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு வீரருக்கும் அவரைப் பிடிக்கும். அதனால், ஒவ்வொரு வீரரையும் எப்படி உங்களுடன் இணைத்துக்கொண்டு செயல்படுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். ஒரு கேப்டனின் முக்கியமான பங்களிப்பு என்பது மைதானத்திற்கு வெளியே வீரர்களுடன் பழகும் விதத்தில்தான் இருக்கிறது. ரோகித் செய்த அனைத்திற்கும் தலைவணங்குகிறேன். அவருடைய அணுகுமுறை உண்மையிலேயே பாராட்டுக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கேப்டன்சி பாணி குறித்துப் பேசிய அவர், எனக்கு என்று ஒரு தனி அணுகுமுறை இருக்கிறது. நெருக்கடியான சூழ்நிலையாக இருந்தாலும் சரி, எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும் சரி, என்னுடைய பாணியில் வீரர்களை ஒன்றிணைத்து அவர்களுடன் இணைந்து செயல்பட முடியும்” என்றுகூறியுள்ளார்.