

மும்பை,
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆர்சிபி முன்னாள் கேப்டனுமான அனில் கும்ப்ளே, ரோகித் சர்மாவின் அதிரடி இன்னிங்ஸை பாராட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி கொல்கத்தாவை வீழ்த்தியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 38 பந்துகளில் 78 ரன்கள் அடித்து அணிக்கு வலுவான தொடக்கத்தை பெற்று கொடுத்தார். இந்நிலையில், ரோகித் சர்மாவின் இந்த அதிரடி இன்னிங்ஸை அனில் கும்ப்ளே பாராட்டி இருக்கிறார்.
அவர் பேசுகையில்,
“ரோகித் சர்மா இப்போது ‘2.0’ அவதாரம் எடுத்துள்ளார். அவர் ஆடிய இன்னிங்ஸ் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தயாராக இருப்பதை காட்டுகிறது. பந்தை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அவர் அடித்த விதம், அவரது பீக் காலத்தை நினைவுபடுத்தியது. வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், பிளெஸ்ஸிங் முசராபானி போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிக்ஸர்கள் அடிப்பது எளிதல்ல. ஆனால் ரோகித் அதை மிக எளிதாகச் செய்தார். இந்த பார்ம் எதிரணி பவுலர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்,” என்றார்.