பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் ஹேசில்வுட் கணுக்கால் காயத்தால் அவதி

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
Image Courtesy : @RCBTweets twitter
Image Courtesy : @RCBTweets twitter
Published on

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 2-ந்தேதி மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இதனிடையே பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள பேட்ஸ்மேன் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ரஜத் படிதார் காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படுகிறார்.

தற்போது அதில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய 3 வாரங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஐ.பி.எல்.-ல் முதல் பாதி ஆட்டங்களை அவர் தவற விடுகிறார்.

இதே அணியில் ரூ.7 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரும் ஐ.பி.எல்.ல் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com