பந்தை எடுத்து கொடுக்க முயன்று ரன் அவுட்: கோபத்தில் சீறிய பாகிஸ்தான் வீரர்..நடந்தது என்ன ?

மாஸ் சதகத் 75 ரன்களும், சல்மான் ஆகா 64 ரன்களும் எடுத்தனர்.
பந்தை எடுத்து கொடுக்க முயன்று ரன் அவுட்: கோபத்தில் சீறிய பாகிஸ்தான் வீரர்..நடந்தது என்ன ?
Published on

மிர்புர்,

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மிர்புரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ் தான் 114 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே " மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மாஸ் சதகத் 75 ரன்களும், சல்மான் ஆகா 64 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து வங்காளதேச அணி 275 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது.

இந்த நிலையில், இந்த போட்டியில் சல்மான் ஆகா 64 ரன்களில் ரன் அவுட் ஆனார். இந்த ரன் அவுட் தற்போது விவாதபொருளாக மாறியுள்ளது.

39வது ஓவரை மெஹிதி ஹசன் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், பந்தை பேட்ஸ்மேனை(சல்மான் ஆகா) நோக்கி அடித்தார். இதனால் சல்மான் ஆகா பந்தை எடுத்து பந்துவீச்சாளரிடம் கொடுக்க முயன்றார். ஆனால் சல்மான் ஆகா (கிரீஸ்) வெளியே நின்று இதை செய்ய நினைத்ததால் அதற்குள் பந்தை எடுத்து மெஹிதி ஹசன் ரன் அவுட் செய்தார்.

இதனால் கடும் கோபமடைந்த சல்மான் ஆகா வங்காளதேச அணியினரை நோக்கி சீறினார். மேலும் பேட்டை தூக்கி எறிந்து சென்றார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com