

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவருக்குப் பாராட்டு தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தோனியின் ஆரம்பகால ஆட்டத்தைப் பார்த்தபோதே அவரிடம் ஏதோ ஒரு தனித்துவமான திறமை இருப்பதை உணர்ந்ததாக சச்சின் தெரிவித்துள்ளார்.சச்சின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தோனியுடனான பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது தோனி பேட்டிங் செய்ததைப் பார்த்ததாக சச்சின் நினைவுகூர்ந்துள்ளார். அப்போது தோனியின் அதிரடி பேட்டிங் திறனைப் பார்த்து, முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலியிடம் அவரிடம் ஏதோ ஒரு சிறப்பான திறமை இருப்பதாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பும் திறன் அப்போதே தனித்துவமாகத் தெரிந்ததாகவும், அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனைகளைப் படைப்பார் என்று நம்பியதாகவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
தோனியுடன் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்துகொண்ட நாட்கள் மிகவும் மகிழ்ச்சியானவை என்று சச்சின் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத பல தருணங்களில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்றதை நினைவுகூர்ந்துள்ளார்.