'கிரிக்கெட்டின் சிறந்த தூதர் நீங்கள்' - ராஸ் டெய்லருக்கு சச்சின் வாழ்த்து

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராஸ் டெய்லர் தனது கடைசி சர்வதேச போட்டியில் இன்று விளையாடினார்.
image courtesy: Sachin Tendulkar twitter via ANI
image courtesy: Sachin Tendulkar twitter via ANI
Published on

ஹாமில்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ராஸ் டெய்லர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சர்வதேச போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில் இன்று அவர் தனது கடைசி சர்வதேச போட்டியாக நெதர்லாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

அவருக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ராஸ் நீங்கள் கிரிக்கெட்டின் சிறந்த தூதராக இருந்தீர்கள்! உங்களுக்கு எதிராக விளையாடியது அற்புதமாக இருந்தது.

பல ஆண்டுகளாக நீங்கள் உங்களை மாற்றி அமைத்துக் கொண்ட விதம், கிரிக்கெட் வீரர்களாக இருக்க விரும்பும் அனைத்து இளம் குழந்தைகளுக்கும் உத்வேகம் அளிக்கிறது. அற்புதமான வாழ்க்கை அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com