ரசிகர்களுடன் 53-வது பிறந்த நாளை கொண்டாடிய தெண்டுல்கர்

ரசிகர்கள் முன் மனைவியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய அவர் ரசிகர்களுடன் உற்சாகமாக செல்பியும் எடுத்துக் கொண்டார்.
ரசிகர்களுடன் 53-வது பிறந்த நாளை கொண்டாடிய தெண்டுல்கர்
Published on

மும்பை,

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர், அதிக சர்வ தேச போட்டிகளில் ஆடிய வீரர் உள்ளிட்ட அரிய சாதனைகளுக்கு சொந் தக்காரரான இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு முன்பு கூடியிருந்த ரசிகர்கள் முன் மனைவியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய அவர் ரசிகர்களுடன் உற்சாகமாக செல்பியும் எடுத்துக் கொண்டார். உடல் முழுவதும் மூவர்ணம் தீட்டிக் கொண்டு தெண்டுல்கரின் பெயரை எழுதும் அவரது தீவிர ரசிகர் சுதிரும் நேரில் வந்து வாழ்த்தினார்.

முன்னதாக தெண்டுல்கர் தனது தாயார், மனைவி மற்றும் செல்லநாயுடன் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, “தாய், மனைவி மற்றும் அந்த குறும்புகாரனுடன் இந்த நாள் சிறப்பாக தொடங் கியது. இந்த மகிழ்ச்சியை விட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com