

லாகூர்,
முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டம் எதிரொலியாக பாகிஸ்தான் அணியிலிருந்து சைம் அயூப் நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், தொடக்க வீரர் சைம் அயூப் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சாஹிப்சாதா பர்ஹான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் சைம் அயூப், பஹர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கி வருகின்றனர். ஆனால், சைம் அயூப் இந்தத் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் சேர்க்கவில்லை.
அவர் விளையாடிய 3 போட்டிகளில் மொத்தம் 21 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், அவருக்கு பதிலாக சாஹிப்சாதா பர்ஹானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.