ஆஸ்திரேலிய வீரரிடம் மணல் காகிதத்தைக் காட்டி கேலி செய்த தென் ஆப்பிரிக்க ரசிகர் - வைரல் வீடியோ

3-வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாதன் லயன்
Published on: 

கேப் டவுன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனை அந்நாட்டு ரசிகர் ஒருவர் மணல் காகிதத்தைக் காட்டி கேலி செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

மணல் காகிதத்தைக் காட்டி கேலி

கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியின்போது, எல்லைக்கோட்டுக்கு அருகே பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த நாதன் லயனை நோக்கி ரசிகர் ஒருவர் மணல் காகிதத்தை காட்டியதாக தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணியின் கடந்த கால சர்ச்சையை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த இந்த ரசிகரின் செயல் தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

2018-ம் ஆண்டு நடந்தது என்ன?

கடந்த 2018-ம் ஆண்டு இதே நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட், பந்தின் தன்மையை மாற்றுவதற்காக மணல் காகிதத்தைப் பயன்படுத்தியது தொலைக்காட்சி கேமராவில் பதிவானது. இந்த சம்பவம் உலக கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பேன்கிராப்டுக்கு 9 மாதத் தடை விதிக்கப்பட்டது.

மீண்டும்

2018-ம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சை ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முக்கியமான சர்ச்சைகளில் ஒன்றாகத் தொடர்ந்து நினைவுகூரப்படுகிறது. தற்போது அதே மைதானத்தில் இரு அணிகளும் மோதும் நிலையில், ரசிகரின் இந்த செயல் பழைய சம்பவத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.

நாதன் லயனை நோக்கி மணல் காகிதத்தை காட்டிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com