"எல்லை தாண்டிய காதல்" சானியா மிர்சா - சோயப் மாலிக் தம்பதி பிரிந்தனர்

விவாகரத்து உறுதி செய்யப்பட்டதால் சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக்கின் எல்லை தாண்டிய காதல் கதை முடிவுக்கு வந்தது.
"எல்லை தாண்டிய காதல்" சானியா மிர்சா - சோயப் மாலிக் தம்பதி பிரிந்தனர்
Published on

புதுடெல்லி

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தம்பதிகள் தற்போது எல்லை தாண்டிய காதல் கதையை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்கள். இந்த ஜோடி விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010 இல் 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி தற்போது முறைப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. சானியா மிர்சா கடந்த சில நாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறார்.அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

ஆம், அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்" என்று பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் உறுதிப்படுத்தினார்.

சோயப் தனக்கு துரோகம் செய்து ஏமாற்றியதை சானியா கண்டுபிடித்ததை தொடர்ந்து இது நடந்து உள்ளது. அப்போதுதான் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். இருப்பினும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருப்பார்கள்.

சமீபத்தில், சானியா தனது விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய இடுகையைப் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில், "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண!" என குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் கவலைப்படத் தொடங்கினர்.

சமீபத்தில் இருவரும் தங்கள் மகனின் பிறந்த நாளை ஒன்றாக கொண்டாடினர் சோயிப் இன்ஸ்டாகிராமில் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாலும், சானியா வெளியிடவில்லை.

சோயிப் தனது இன்ஸ்டாவில் "நீங்கள் பிறந்தவுடன், நாங்கள் மிகவும் அடக்கமாகிவிட்டோம், வாழ்க்கை எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

நாம் ஒவ்வொரு நாளும் ஒன்றாக இருப்பதில்லை, சந்திப்பதில்லை, ஆனால் பாபா உங்களைப் பற்றியும் உங்கள் புன்னகையைப் பற்றியும் ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் கேட்கும் அனைத்தையும் அல்லா உங்களுக்கு வழங்குவானாக. பாபாவும் அம்மாவும் உன்னை நேசிக்கிறார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com