

பெல்பாஸ்ட்
அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு இன்று தொடங்கியது. இதில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதன்படி, அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. 155 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது. இந்த போட்டியில், தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா இருவரும் மோசமான வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
அவர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஒரு டி20 போட்டியில், இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற்றப்பட்டது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இதில், இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஜெய் மூந்திரா வீசிய முதல் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் சாம்சன் வெளியேறினார். 3 பந்துகளுக்கு பின்னர், இந்தியாவின் அபிஷேக் சர்மா அடித்த பந்து மேத்யூ ஹொல்லார்டிடம் சென்று கேட்ச் ஆனது.
இதனால், 20 ஓவர்கள் போட்டியின் ஒரே ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டமிழந்து மோசமான வரலாற்று சாதனை ஏற்படுத்தியுள்ளனர்.
2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களான தமீம் இக்பால் மற்றும் சவும்யா சர்கார் இருவரும் ஒரே ஆட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதற்கடுத்து, இந்திய ஜோடி தற்போது ஆட்டமிழந்துள்ளது. இதேபோன்று, முதல் பந்தில் சாம்சன் ஆட்டமிழப்பது இது 2-வது முறையாகும்.