ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்திற்காக தியேட்டரையே புக் செய்த சஞ்சு சாம்சன்

ரஜினிகாந்த் மீது சஞ்சு சாம்சன் கொண்டுள்ள இந்தத் தனிப்பட்ட அன்பும் ரசிகர் உணர்வும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்திற்காக தியேட்டரையே புக் செய்த சஞ்சு சாம்சன்
Published on: 

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். ரஜினிகாந்தின் திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் அவர், தற்போது வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் பார்ப்பதற்காக ஒட்டுமொத்த திரையரங்கத்தையும் முன்பதிவு செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதால், படம் வெளியான நாளில் அவரால் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை. இதனால், அடுத்த நாளில் படத்தைப் பார்க்கத் திட்டமிட்ட சஞ்சு சாம்சன், தனக்காகத் திரையரங்கம் முழுவதையும் புக் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரஜினிகாந்தின் திரைப்படங்களைப் பார்ப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவருடைய அடுத்த படத்திற்காக எப்போதும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் இணைந்து பெரிய திரையில் ரஜினிகாந்தின் படத்தைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார். இந்திய அணியின் உதவிப் பணியாளர்களில் தமிழைப் புரிந்துகொள்ளும் நபர்களும் இந்தத் திரையிடலில் கலந்துகொள்ள உள்ளதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் மீது சஞ்சு சாம்சன் கொண்டுள்ள இந்தத் தனிப்பட்ட அன்பும் ரசிகர் உணர்வும் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com