வைபவ் சூர்யவன்ஷிக்காக தனது இடத்தை சஞ்சு சாம்சன் தியாகம் செய்தார் - அபிஷேக் சர்மா

வைபவ் சூர்யவன்ஷிக்காக சஞ்சு சாம்சன் 3வது இடத்தில் களமிறங்கினார்.
வைபவ் சூர்யவன்ஷிக்காக தனது இடத்தை சஞ்சு சாம்சன் தியாகம் செய்தார் - அபிஷேக் சர்மா
Published on: 

ஆக்லாந்து,

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நாளை 4-வது டி20 போட்டி நடைபெற உள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்

இத்தொடரின் முதல் இரு போட்டியில் துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். 2-வது போட்டியில் இளம் வீரர் சூர்யவன்ஷி 3-வது வீரராக களமிறங்கினார். இதனிடையே, 3வது போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்காகவும், அணியின் நலனுக்காகவும் சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் களமிறங்கினார்.

சஞ்சு சாம்சனின் தியாகம்

இதுகுறித்து அபிஷேக் சர்மா கூறுகையில், ‘‘முதல் மற்றும் 2-வது போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், மூன்றாவது போட்டியில் சக வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்காக தனது இடத்தை தியாகம் செய்து 3வது இடத்தில் களமிறங்கினார். பேட்டிங் வரிசையில் தனக்கு பிடித்தமான இடத்தை விட்டுக்கொடுப்பது எளிதானதல்ல. இது, சஞ்சு சாம்சனின் பெருந்தன்மையை காண்பிக்கிறது. சகவீரர்கள் சுயநலமின்றி இருப்பதால் தான், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா சிறந்த அணியாக வலம் வர முடிகிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com