இன்னும் 84 ரன்கள்... ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சஞ்சு சாம்சன்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
இன்னும் 84 ரன்கள்... ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சஞ்சு சாம்சன்
Published on

டப்ளின்,

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ரோகித்தின் சாதனை ஒன்றை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அயர்லாந்து தொடர்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டிகள் வருகிற 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

ரோகித் சர்மாவின் சாதனை

இந்தியா - அயர்லாந்து டி20 போட்டிகள் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா தக்கவைத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிராக 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித், 3 அரைசதங்கள் உட்பட 201 ரன்கள் குவித்துள்ளார்.

சஞ்சுவுக்கு தேவை 84 ரன்கள்

அயர்லாந்துக்கு எதிராக இதுவரை 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 59.00 சராசரி மற்றும் 171.01 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 118 ரன்கள் எடுத்துள்ளார். இதனால், ரோகித் சர்மாவின் 201 ரன்கள் சாதனையை முறியடிக்க சஞ்சுவுக்கு இன்னும் 84 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

புதிய வரலாறு படைப்பாரா?

இரண்டு போட்டிகள் மட்டுமே கொண்ட இந்த தொடரில் சஞ்சு சாம்சன் 84 ரன்கள் எடுத்துவிட்டால், இந்தியா - அயர்லாந்து டி20 போட்டிகள் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைப்பார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com