

மும்பை,
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி நாளை டெல்லி அணியுடன் மோதுகிறது.
இந்நிலையில் மும்பை அணிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் அணியுடன் இணைந்துள்ளார்.
மும்பை தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சான்ட்னர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.