சாரா டெண்டுல்கரின் 29-வது பிறந்தநாள்: சச்சின் நெகிழ்ச்சி பதிவு - வைரல்

சாராவின் பிறந்தநாளான இன்று தனது மகளின் புகைப்படத்தை சச்சின் பகிர்ந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
Published on: 

மும்பை,

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மகள் சாரா டெண்டுல்கரின் 29-வது பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது நெகிழ்ச்சியான பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிறந்தநாள் வாழ்த்துகள் சாரா

சாராவின் பிறந்தநாளான இன்று தனது மகளின் புகைப்படத்தை சச்சின் பகிர்ந்துள்ளார்.

அதனுடன் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “ஒரு காலத்தில் நான் உனக்கு வழிகாட்டியாக இருந்தேன். ஆனால் இப்போது நீ தேர்ந்தெடுத்து செல்லும் பாதையை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் சாரா, லவ் யூ” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அடையாளத்தை உருவாக்கும் சாரா

சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் பொது சுகாதார ஊட்டச்சத்து தொடர்பான முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

தற்போது சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக செயல்பட்டு வரும் அவர், ஊட்டச்சத்து தொடர்பான துறையிலும் தொழில்முனைவிலும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

மகளின் வளர்ச்சியையும் அவர் தேர்ந்தெடுத்த பாதையையும் பெருமையுடன் குறிப்பிட்டு சச்சின் வெளியிட்டுள்ள இந்தப் பிறந்தநாள் வாழ்த்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com