இலங்கை - வங்காளதேச தொடருக்கான அட்டவணை அறிவிப்பு

வங்காளதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
image courtesy: twitter/@ICC
image courtesy: twitter/@ICC
Published on

கொழும்பு,

வங்காளதேச கிரிகெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 1-1 சமனில் முடிந்தது. இதையடுத்து, வங்காளதேச அணியானது இம்மாதம் 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

அதன்பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது எதிர்வரும் வரும் 25ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடர்களை முடித்த கையோடு வங்காளதேச அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கதேச அணியானது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தரப்பு தொடரில் விளையாடவுள்ளது.

இதையடுத்து இந்த தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி காலே, கொழும்பு, பல்லகலே, தம்புல்லா ஆகிய 4 மைதாங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடர் ஜுன் 17ம் தேதி முதல் ஜுலை 10ம் தேதி வரை நடக்கிறது.

போட்டி அட்டவணை விவரம்:

டெஸ்ட் போட்டிகள்:

முதல் டெஸ்ட்: ஜுன் 17-21, காலே

ஒருநாள் போட்டிகள்:

முதல் ஒருநாள் போட்டி: ஜுலை 2, கொழும்பு

2வது ஒருநாள் போட்டி: ஜுலை 5, கொழும்பு

3வது ஒருநாள் போட்டி: ஜுலை 8, பல்லகலே

டி20 போட்டிகள்:

முதல் டி20 போட்டி: ஜுலை 10, பல்லகலே

3வது டி20 போட்டி: ஜுலை 16, கொழும்பு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com