2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இன்று மோதல்

ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இன்று மோதல்
Published on: 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

இங்கிலாந்து

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கேப்டன் ஹாரி புரூக், ஜோ ரூட், பென் டக்கெட் ஆகியோரின் ஆட்டம் அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

ஆஸ்திரேலியா

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும், தொடரை சமன் செய்யும் நம்பிக்கையில் இங்கிலாந்தும் மோதுவதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இளம் வீரர் மஹ்லி பியர்ட்மேன் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X