

டுப்லின்,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் நடைபெறவிருந்தது. ஆனால், கனமழை காரணமாக அப்போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
அயர்லாந்தின் பிரிடி நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ், இப்ராகிம் களமிறங்கி விளையாடி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 2 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. மழையால் ஆட்டம் தொடங்க சற்று கால தாமதம் ஆனதால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.