2வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில், ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தல்

வெஸ்ட் இண்டீஸ் 405 ரன்கள் குவித்துள்ளது.
2வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில், ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தல்
Published on: 

கவுகாத்தி,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிஆன 2வது ஒருநாள் போட்டியில் சும்பன் கில், ரோகித் சர்மா சதம் விளாசினர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

2வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் ஜான் சேப்பல், கேப்டன் ஷாய் ஹோப், அமீர் ஜன்கோ ஆகிய 3 வீரர்களும் அதிரடியாக சதம் விளாசினர். ஜான் 68 பந்துகளில் 101 ரன்களும், ஷாய் ஹோப் 94 பந்துகளில் 104 ரன்களும், அமீர் ஜன்கோ 77 பந்துகளில் 114 ரன்களும் குவித்தனர்.

கில், ரோகித் சதம்

இதனை தொடர்ந்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கி விளையாடி வருகிறது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் , ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருவரும் சதம் விளாசியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, இந்தியா 26.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 255 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 101 ரன்களுடனும், சுப்மன் கில் 145 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றிபெற இன்னும் 151 ரன்கள் எடுக்க வேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com