2வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா இன்று மோதல்

முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.
2வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா இன்று மோதல்
Published on

ஹராரே,

ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

2வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

X

Daily Thanthi
www.dailythanthi.com